இடி மின்னல் தாக்கும்போது என்ன செய்ய வேண்டும்? மின்சார வாரியம் கூறியுள்ள வழிமுறைகள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதைத் தொடர்ந்து...
மின் விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மழைக் காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய 31 வழிகாட்டுதல்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
1.இடி, மின்னல் தாக்கும்போது திறந்தவெளியில் நிற்கவேண்டாம்.
2.உடனடியாக கான்கிரீட் கூரையாலான கட்டடம், உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும்.
3.குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ இருக்கக் கூடாது.
4.தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.
5.டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசி ஆகியவற்றை பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
6.மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாதபோது, சுவிட்சுகளை அணைத்து வைக்க வேண்டும்.
7.மின் வாரியத்தின் மின் மாற்றிகள், துணை மின் நிலையத்துக்காக போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிக்கக்கூடாது.
8.இவற்றின் அருகில் செல்வதை கூட தவிர்க்க வேண்டும்.
9.மின்சார வயர்களுக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை வெட்டுவதற்கு மின் வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
10.மேல்நிலை மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல், உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
11.மின் கம்பங்கள், அவற்றைத் தாங்கும் கம்பிகளைத் தொடுவதைத் தவிர்ப்பதோடு, அவற்றில் கால்நடைகளைக் கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
12.சுவற்றின் உள்பகுதியில் மின்சார வயர்கள் பதிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் ஆணி அடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
13.மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்.
14.மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்கக் கூடாது.
15.உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
நன்றி : த
மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்
அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் இவைகளை மீறியும் மரணம் வரலாம் என்பதையும் நினைவில் கொள்வோம்..
Tweet | ||||