Tuesday, October 22, 2013

மார்க்கத்தை பரப்ப போலி அலங்காரங்கள் வேண்டாம்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..



அன்பின் சகோதர சகோதரிகளே..




 ஃபேஸ்புக் ட்விட்டர், மற்றும் பல  இஸ்லாமிய வலதளங்களில் மலைகளில் காய்கனிகளில், விலங்கினங்களில் எல்லாம் அல்லாஹ் அல்லது முஹம்மது என்ற அரபி உருவம் பொறிக்கப்பட்ட படங்களை சிலர் வெளியிடுகின்றனர்.

இவைகள் பெரும்பாலும் கிராஃபிக்ஸ் என்று நிரூபிக்கபட்டவை.மார்க்கத்தை பரப்புவதற்கு இதுவெல்லாம் சரியான வழிகள் அல்ல.

ஒரு மதம் அதன் கருத்துக்களால் தான் பிறரை கவர்ந்து ஈர்க்க வேண்டும்.இஸ்லாத்திற்கு அந்த தகுதியும் ஆற்றலும் ஏராளமாகவே இருக்கிறது.
இம்மார்க்கத்திற்கு போலி விளம்பரங்களோ, அற்புதத் திருவிழாக்களோ தேவையில்லை.

நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நேசிப்பதாக இருந்தாக அவர்களின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேருங்கள்.அவர்களின் சட்டதிட்டங்களை நீங்களும் கற்று, செயல்படுத்தி பிறருக்கும் எத்தி வையுங்கள்.அதுவே நபியின் கட்டளையும் ஆகும்.

இதை அறியாமல் மார்க்கத்தை விளங்காத சில முஸ்லீம்கள் செய்யக் கூடிய இந்த செயல்கள் கிராஃபிக்ஸ் என்று நிரூபிக்கப் பட்டால் இஸ்லாத்தின் பெயர் மாற்றுமத நண்பர்கள் மத்தியில் தவறான பார்வையை உண்டாக்கும் .
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கிராஃபிக்ஸ்களுக்கு பின்னனியில் யூதர்களின் கையாடல் இருக்கிறது என்பதும் சிலரின் கருத்து.அதாவது இதுப்போன்ற படங்களை இப்படியே பரவ விட்டால், வருங்காலத்தில் இஸ்லாத்தை சரியாக அறியாத சந்ததிகள், இதுபோன்ற காய்கறிகள், விலங்கினங்களில் எல்லாம் அல்லாஹவின் பெயர் இருப்பதை பார்த்து, இவற்றை அல்லாஹ்வாக நினைத்து வணங்க ஆரம்பிக்கலாம் என்பது அவர்களின் திட்டம்.
அல்லாஹ் பாதுகாப்பானாக..

எனவே சில அற்ப விளம்பரங்களுக்காக இப்படி போலி அலங்காரங்களை பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்வது சிறந்தது.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்ன விதங்களில் இந்த மார்க்கத்தை முறையாக நாமும் கற்று, பிறருக்கும் கற்றுகொடுக்கும் நன்மக்களாக நம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கிடுவானாக..

-வஸ்ஸலாம்..

No comments:

Post a Comment