Tuesday, December 31, 2013

சோலைவனமாகும் பாலைவனங்கள்..

கீழ்காணும் படங்கள் யாவும் நம் நாட்டில் உள்ள ஏதேனும் வயல்வெளிப்  பகுதிகள் என்று சொன்னால் நம்புவீர்கள்..
சவூதி அரேபியாவின் பாலைவெளிகள் என்றால்  நம்புவீர்களா..??

ஆனால் உண்மை அதுதான்..


சமீபத்தில் மதினா சென்று திரும்பும்பொழுது (ரியாதுக்கு 300கி.மீ முன்) புரைதா என்ற இடத்திலிருந்து சில கி.மீ தூரம் வரை பாலைவனமாக இருந்த இடங்களெல்லாம் சமீபத்தில் பெய்த மழையால் பச்சை பசேலென்று மாறி வருவதை பார்த்தேன்..

அல்லாஹ்வின் தூதரின் {ஸல்} முன்னறிவிப்பு நினைவுக்கு வந்தது.அதன் ஆரம்பம் தான் இது என தோன்றியது.


"அரபுப் பிரதேசம் நதிகளும் சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்தநாள் வராது" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..

(நூல்: முஸ்லிம் 1681)

அல்லாஹு அக்பர்...
















Friday, December 20, 2013

குர்ஆன் கல்வி, பாடம்-10


குர்ஆன் கல்வி, பாடம்-9


குர்ஆன் கல்வி, பாடம்-8


Thursday, October 31, 2013

அரபி அடிப்படைக் கல்வி பாடம்2 (குறியீடுகள்)





இன்ஷா அல்லாஹ் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன் ஆகிய இரண்டு தினங்களும் அரபி அடிப்படை பாடங்கள் பதியப்படும்.

என் பணியை தொடர உங்கள் துஆவும் ஆதரவும் அவசியம்..

Sunday, October 27, 2013

அரபி அடிப்படை கல்வி, பாடம்-1 (அரபு எழுத்துக்களும் அதன் உச்சரிப்புகளும்)





குர்ஆன் கற்பதற்கான அடிப்படை பாடங்கள் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பதியப்படும் இன்ஷா அல்லாஹ்..

Tuesday, October 22, 2013

மார்க்கத்தை பரப்ப போலி அலங்காரங்கள் வேண்டாம்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..



அன்பின் சகோதர சகோதரிகளே..




 ஃபேஸ்புக் ட்விட்டர், மற்றும் பல  இஸ்லாமிய வலதளங்களில் மலைகளில் காய்கனிகளில், விலங்கினங்களில் எல்லாம் அல்லாஹ் அல்லது முஹம்மது என்ற அரபி உருவம் பொறிக்கப்பட்ட படங்களை சிலர் வெளியிடுகின்றனர்.

இவைகள் பெரும்பாலும் கிராஃபிக்ஸ் என்று நிரூபிக்கபட்டவை.மார்க்கத்தை பரப்புவதற்கு இதுவெல்லாம் சரியான வழிகள் அல்ல.

ஒரு மதம் அதன் கருத்துக்களால் தான் பிறரை கவர்ந்து ஈர்க்க வேண்டும்.இஸ்லாத்திற்கு அந்த தகுதியும் ஆற்றலும் ஏராளமாகவே இருக்கிறது.
இம்மார்க்கத்திற்கு போலி விளம்பரங்களோ, அற்புதத் திருவிழாக்களோ தேவையில்லை.

நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நேசிப்பதாக இருந்தாக அவர்களின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேருங்கள்.அவர்களின் சட்டதிட்டங்களை நீங்களும் கற்று, செயல்படுத்தி பிறருக்கும் எத்தி வையுங்கள்.அதுவே நபியின் கட்டளையும் ஆகும்.

இதை அறியாமல் மார்க்கத்தை விளங்காத சில முஸ்லீம்கள் செய்யக் கூடிய இந்த செயல்கள் கிராஃபிக்ஸ் என்று நிரூபிக்கப் பட்டால் இஸ்லாத்தின் பெயர் மாற்றுமத நண்பர்கள் மத்தியில் தவறான பார்வையை உண்டாக்கும் .
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கிராஃபிக்ஸ்களுக்கு பின்னனியில் யூதர்களின் கையாடல் இருக்கிறது என்பதும் சிலரின் கருத்து.அதாவது இதுப்போன்ற படங்களை இப்படியே பரவ விட்டால், வருங்காலத்தில் இஸ்லாத்தை சரியாக அறியாத சந்ததிகள், இதுபோன்ற காய்கறிகள், விலங்கினங்களில் எல்லாம் அல்லாஹவின் பெயர் இருப்பதை பார்த்து, இவற்றை அல்லாஹ்வாக நினைத்து வணங்க ஆரம்பிக்கலாம் என்பது அவர்களின் திட்டம்.
அல்லாஹ் பாதுகாப்பானாக..

எனவே சில அற்ப விளம்பரங்களுக்காக இப்படி போலி அலங்காரங்களை பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்வது சிறந்தது.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்ன விதங்களில் இந்த மார்க்கத்தை முறையாக நாமும் கற்று, பிறருக்கும் கற்றுகொடுக்கும் நன்மக்களாக நம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கிடுவானாக..

-வஸ்ஸலாம்..

உண்மை நட்பை உணர்த்திருக்கிறீர்களா நீங்கள்..

                                                        ஏக இறைவனின் திருப்பெயரால்..  


அல்லாஹ் தான் என் இறைவன்.அவனே அகில உலகையும் படைத்து பரிபாலிக்க கூடியவன் என்ற சத்திய மந்திரத்தை சொன்னதற்காகவா என் உத்தம தோழரை நீங்கள் கொலை செய்ய பார்த்தீர்கள்..??

அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அத்துமீறிய சமுதாயமகவே இருக்கிறீர்கள்....

என்று சொல்லும்போதே அபுபக்கர் (ரலி) அவர்களின் மீதும் பாய்ந்து கடுமையான தாக்குதல் தொடுக்கிறார்கள் அந்த குறைஷி கயவர்கள்.தலையில் பலமான ரத்த காயம் ஏற்பட்டு கீழே விழும் அவரையும்,ஏற்கனவே அவர்களால் தாக்கப்பட்டு ஒருபுறம் மூர்ச்சையாகி கிடந்த அவரின் அருமைத் தோழரான அண்ணலாரையும் அவர்களது உறவினர்கள் ஓடிவந்து மீட்டெடுக்கிறார்கள்,,

தனக்கு அடிகளும் அவமானங்களும் ஏற்பட்ட அந்த நேரத்திலும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல்,
சத்தியத்தை சொன்னதற்காக தன் உத்தம தோழர் மீது அத்துமீறி விட்டார்களே என்ற கவலையில் அவரின் நலத்தை தன் தாயிடம் விசாரித்துகொண்டும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரான தன் தோழரையும் கண்ணியப்படுத்திக் கொண்டும் இருக்கிறது நட்பின் ஒருபுறம்..

சத்தியத்தை சொன்னதற்காக தன்னை தாக்கியது கூட பெரிதல்ல..அதை ஏற்றுக்கொண்டதற்காக தன் தோழரை தாக்கிவிட்டார்களே என்ற கவலையிலும், வேதனையிலும் ஆழ்ந்தது நட்பின் மறுபுறம்..

மறுநாள் காலையில் தன்னால் தன் தோழருக்கு அடியும் அவமானமும் ஏற்பட்டுவிட்டதே.அவரின் வாடிய முகத்தை நான் எங்கனம் காண்பேன் என்று அச்சம் கலந்த எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்த அண்ணாலாரின் முன்னிலையில்...

"அஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸூலல்லாஹ்" என்று அழகிய முகமனோடும் மலர்ந்த முகத்தோடும் வந்து நின்ற தன் தோழரை
ஆச்சர்யத்தோடும், ஆர்வத்தோடும் ஆரத்தழுவி  நலம் விசாரித்துகொண்டார்கள் அண்ணலார் அவர்கள்..

நேற்று தனக்கு தன் நண்பரால் நேர்ந்த அடியையும் அவமானங்களையும் சற்றும் தன் முகத்தில் வெளிப்படுத்தாத அபுபக்கர்(ரலி) அவர்கள், மலர்ந்த முகத்தோடு வந்தது மட்டுமின்றி...

அல்லாஹ்வின் தூதரே..என் தாய் சத்திய மார்க்கத்தை ஏற்க வந்துள்ளார் என்று வாஞ்சையோடு கூறியதிலிருந்து அபுபக்கர் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நட்பின் சிகரம் தெரிகிறது.

அல்லாஹு அக்பர்..

இதுவே அருமையான நட்புக்கு இலக்கணமாகும்.
எல்லா விஷயங்களை போலவே நபிகள் நாயகத்தின் வரலாற்றில் நட்புக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி உள்ளது..

அல்லாஹ்வின் தூதருடன், அபுபக்கர்(ரலி) அவர்கள் இருந்த அனைத்து சம்பவங்களையும் படித்துப் பாருங்கள்.அர்த்தமுள்ள நட்பின் நறுமணத்தை உணர்வீர்கள்...

Thursday, October 17, 2013

போலி அழைப்பாளர்கள்.

                                                    ஏக இறைவனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,,


நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-

மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும்.கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் (நரகத்தைச்) சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?' என்று கேட்பார்கள்.




அதற்கு அவர், 'நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்" என்று கூறுவார்.


உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

புகாரி-3267

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக..

Wednesday, October 16, 2013

ஹஜ்- ஓர் சர்வதேச சமத்துவ மாநாடு..

                                                  
                                                      ஏக இறைவனின் திருப்பெயரால்..

                                                        


60க்கும் மேற்பட்ட வருடங்கள் கடந்துவிட்டன தீண்டாமைக்கெதிரான வன்கொடுமை சட்டம் போடப்பட்டு.ஆனாலும் எந்நாட்டில் அதை முழுமையாக ஒழிக்க முடியவில்லை..



இன்னும் எந்நாட்டில் செருப்பனிய இயலாத கீழ்தட்டு மக்கள் உண்டு..




இன்னும் எந்நாட்டில் முழு ஆடை உடுத்த முடியாத மலைவாழ் மக்கள் உண்டு..



இன்னும் எந்நாட்டில் தங்களின் கடவுளை அருகில் சென்ற பூஜிக்க அறுகதையற்றவர்களாக கருதப்படும் மக்கள் உண்டு..

இன்னும் எந்நாட்டில் தீண்டதகாதவர்களாக கருதப்படும் என் சகோதரர்கள் உண்டு..


ஆனால் இதையெல்லாம் விட பல மடங்கு மேலாக, மனிதனையே மனிதன் அடிமையாக வியாபாரம் செய்யும் அளவுக்கு தீண்டாமையில் ஊறிப் போயிருந்த ஒரு காட்டுமிராண்டி சமுதாயத்தை, வெறும் 23- ஆண்டுகளில்

*புடம்போட்ட தங்கங்ளாக, 
*ஒரே தட்டில் உண்டு மகிழும் 
   உறவுகளாக, 
*தன் இ�றைவனை வணங்க 
  தினம் தினம் ஒன்றாக 
  அணிவகுக்கும் 
  சமமான சமுதாயமாக 

மாற்றினார் எங்கள் தியாகத் தலைவர் நபிகள் நாயக�ம் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..

அல்லாஹ்வுக்கே எல்லாப் புக�ழும்.

அந்த சகோதரத்துவ பிணைப்பு என்றென்றும் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஹஜ் என்ற மாபெரும் சகோதரத்துவ மாநாடு..

அங்கே சங்கமிப்பவர்களின் மத்தியில் நிறம், மொழி, இனம் வேறுபாடு இல்லை..அனைவரும் ஒருவரோடு ஒருவர் கலந்து அணிவகுத்து இறைவனை வணங்குவர்..




அங்கே சங்கமிப்பவர்களின் மத்தியில் தங்குமிடத்தில் உயர்வு தாழ்வு இல்லை..அனைவரும் மினா என்ற வெட்டவெளியில் கூடாரம் அடித்து தங்குவர்..
அங்கே சங்கமிப்பவர்களின் மத்தியில் ஆடையில் கூட உயர்வு தாழ்வு இல்லை.. அனைவரும் தைக்கப்படாத வெந்நிற ஆடையை உடலில் சுற்றிக்கொள்வர்..

பணத்தால் ஒருவன் உயர்ந்தவனாக இருந்தால், நான் மனிதர்களிலேயே உயர்ந்த இனம் என்ற கர்வம் அவனுக்கு வந்துவிடும் என்பதற்காகவோ என்னவோ, பணக்காரர்கள் மீது மட்�டும் கட்டாய கடமையாக்கப் பட்ட கிரியை இது...

இத்தகைய நேர்வழியை எனக்கு தந்த வல்ல இறைவனை கண்ணீர்மல்க போற்றி புக�ழ்கிறேன்..

இத்தகைய நேர்வழி என் மாற்றுமத நண்பர்களுக்கும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்...


உமரும் இஸ்லாமும்..

                                                    ஏக இறைவனின் திருப்பெயரால்..

   அஸ்ஸலாமு அலைக்கும் 
அவர்ஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..


உமர் பின் கத்தாப் ரழியல்லாஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சம்பவம் ஒரு உணர்ச்சி மிகுந்த வரலாறாகும்.

இஸ்லாம் என்ற விதை அவர்களின் மனதில் சட்டென விழவில்லை.இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் இடையில் நடந்த மனப்போராடம் அற்புதமானதாகும்.

இஸ்லாத்தை ஏற்காத காலத்தில் ஒருபக்கம் அவர் முஸ்லீம்களுக்கு எதிராக பல கொடுமைகளை நிகழ்த்தி வந்தாலும், இன்னொரு பக்கம்,முஸ்லீகள் இஸ்லாத்தின் மீது வைத்திருக்கும் உறுதியை நினைத்து ஆச்சார்யமடைய கூடியவராக இருந்தார்.அந்த சிந்தனை அவரின் மனதில் விழுந்த முதல் விதை என்று சொல்லலாம்.

ஒருநாள் உமர் ரழி அவர்கள் காபாவின் திரையின் உள்ளே படுத்திருந்தார்கள்.அப்பொழுது நபி{ஸல்} அவர்கள் அங்கே தனிமையில் தொழுதுக் கொண்டிருந்தார்கள். தொழுகையின்போது திருமறையிலிருந்து சூரா அல் ஹாக்கா வின் வசனங்களை ஓதிக்கொண்டிருக்கிறார்கள்.

அதை ரசித்து செவியேற்றுக் கொண்டிருந்த உமர் ரழி அவர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர் ஒரு சிறந்த கவிஞராக இருப்பாரோ என்று தன் எண்ணத்தில் நினைக்கிறார்கள்.
அடுத்த நொடியில் நபி ஸல் அவர்கள்...

"இது மரியாதைக்குரிய தூதரின் (மூலம் சொல்லப்பட்ட) கூற்றாகும்.
இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்"..

(69:40,41)

என்ற வசனத்தை ஓதினார்கள்.

ஆச்சர்யமடைந்த உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இவர் ஜோதிடர் தான் என்று நினைக்க, அப்போது நபி ஸல் அவர்கள்..


இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. (69:42,43)
என்ற வசனத்தை ஓதினார்கள்.

இந்நிகழ்வைப் பற்றி பின்னாளில் நினைவுகூர்ந்த உமர் ரழி அவர்கள்,
தனக்கு அக்கனமே இஸ்லாத்தை ஏற்று விட எண்ணம் தோன்றியதாக கூறியுள்ளார்கள்.
இருந்தாலும் மற்ற குரைஷிகளை போல, தன் மூதாதையர்கள் கொள்கையை மறுப்பதா..??! என்ற பிடிவாத எண்ணம், அவரின் மனதில் தோன்றிய சத்தியத்தை மறைத்தே வந்தது.

ஒரு பக்கம் இஸ்லாம் பற்றிய சிந்தனை,இன்னொரு பக்கம் தங்களின் முன்னோர்களின் மீதுள்ள பாசத்தால் அவர்கள் கற்று தந்த கொள்கை.இந்த இரண்டு எண்ணங்களும் மாறி மாறி இவரை போட்டி வாட்டி எடுக்கவே மிகுந்த குழப்பத்தில் இருந்த உமர் அவர்கள்,
இந்த புதிய குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் முஹம்மது தான். அவரின் கதையை முடித்தால் எல்லாம் சரியாகிடும் என்ற எண்ணத்தோடு தன் உறைவாளை எடுத்து அணிந்து கொண்டு புறப்படுகிறார்.

வழியில் நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் ரழி அவர்களின் மூலமாக உமரின் தங்கையும், மச்சானும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிந்தவுடன், மிகுந்த கோபத்தோடும் அதிர்ச்சியோடும் முதலில் அவர்களின் கதையை முடிக்கிறேன் என்ற கர்ஜனையோடு தன் தங்கையின் வீட்டை நோக்கி நடக்கிறார்.

அப்போது கப்பாப் ரழி அவர்கள் உமர் ரழி அவர்களின் சகோதரிக்கும் அவரின் கணவருக்கும் தன் ஏட்டிலுள்ள தாஹா எனும் அத்தியாயத்தை கற்றுக்கொடுத்து கொண்டிருந்தார்கள்.உமர் வருவதை அறிந்த கப்பாப் ரழி அவர்கள் வீட்டினுள் மறைந்து கொண்டார்கள்.உமரின் சகோதரியும் அந்த ஏட்டை
மறைத்துவிடுகிறார்கள்.எனினும் உமர் ரழி அவர்கள் வீட்டின் அருகே வரும்போதே அவர்கள் படித்துக்கொண்டிருந்த திருமறை வசங்களை செவியுற்றிருந்தார்.

உள்ளே வந்தவுடன்... நா உங்களிடமிருந்து செவியுற்ற அந்த மெல்லிய சப்தம் என்ன என்று கேட்க, நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறொன்றும் இல்லையே என்று அவ்விருவரும் பதிலளிக்கிறார்கள்.

அப்போது உமர் நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா..? என்று சப்தமாக கேட்கிறார்.அதற்கு அவரின் மச்சான்
உமரே.. சத்தியம் உன் மதம் அல்லாத வேறொன்றில் இருந்தால் அதற்கு உன் கருத்து என்ன..? எனறு கேட்க, கடுஞ்சினம் கொண்ட உமர் அவரின் மீது பாய்ந்து கடுமையாக தாக்கவும் செய்கிறார்.உமரிடமிருந்து தன் கணவனை விலக்கிவிட முயற்ச்சித்த தன் தன் சகோதரியை உமர் கன்னத்தில் அரைந்து கீழே தள்ளிவிடுகிறார்.

கோபமடைந்த உமரின் சகோதரி
உன் மார்க்கமல்லாத வேறொன்றில் சத்தியம் இருந்தாலுமா எ�ற்றுக்கொள்ளக் கூடாது..??வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை,முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன், என்று உரக்க கூறுகிறார்கள்.
தனது கோபம் பலனற்று போனதை உணர்ந்த உமர் அவர்கள் அமைதியடைந்தார்கள்.
சிறிது அமைதிக்கு பிறகு "அந்த ஏட்டை என்னிடம் தாருங்கள், நான் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்.
முதலில் மறுத்த உமரின் சகோதரி பிறகு கொடுக்கிறார்.

உமர் படிக்க துவங்குகிறார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்...தாஹா.. என ஆரம்பித்து அதன் பதினான்காம் வசனம் வரை படிக்கிறார்.

ஆஹா..இவை என்ன தூய்மையான வார்த்தைகள்.!! என்ன அழகான வசனங்கள்,!! முஹம்மதை எனக்கு காட்டுங்கள்.
எனக்கூறுகிறார்.

அப்போது உள்ளே மறைந்திருந்த கப்பாப் ரழி அவர்கள் இதைக் கேட்டவுடன் வெளியே வந்து.. உமரே நற்ச்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உங்கள் மூலமாகவோ அபுஜஹல் மூலமாகவோ இஸ்லாத்திற்கு பலம் சேர்ப்பாயாக என அல்லாஹ்விடம் கேட்டிருந்தார்கள். அது உங்கள் மூலம் நிறைவேறுகிறது என்றே நான் எண்ணுகிறேன், என்றார்கள்

பின் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸஃபா மலையின் வீட்டில் இருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டதும் உமர் அந்தவீட்டை நோக்கி நடக்கிறார்.

வீட்டை நெருங்கி கதவை தட்டியவுடன், உள்ளிருந்து பார்த்தவர்கள் உமர் வாளுடன் வந்திருக்கிறார் என பதற்றத்துடன் சொல்கின்றனர்.

ஓஹ்..உமரா..அவருக்கு கதவை திறந்துவிடு.அவர் நல்லதை நாடி வந்திருந்தால் நல்லதை அவருக்கு தருவோம்.கெட்டதை நாடி வந்திருந்தால் அதையே அவருக்கு தருவோம் என ஹம்ஜா ரழி அவர்கள் கூற, அனைவரும் ஒன்றுகூடி நிற்க்கின்றார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள் வீட்டின் உட்புறம் வஹி இறங்கிய நிலையில் இருக்கின்றார்கள்.

கதவு திறக்கப்படுகிறது.
உமர் உள்ளே வருகிறார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே நபி ஸல் அவர்கள் உமரின் சட்டையை பிடித்து உலுக்கியபடி
உமரே அசத்தியத்தை விட்டு வெளியேற மாட்டாயா..?வலீதுக்கு எற்பட்டது போன்ற வேதனை உனக்கும் ஏற்பட வேண்டுமா..? என்று கேட்க அமைதியாக நபியின் கையை எடுத்துவிட்ட உமர்

"அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்.வ அன்னக்க ரஸூலுல்லாஹ்.."

வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்றும்,நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்..
என்று நபி ஸல் அவர்களின் முன்னிலையில் ஷஹாதத் முழங்குகிறார்.

மகிழ்ச்சியில் ஆழ்ந்த அங்கிருந்த அனைவரும் உமரை கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்..

சமூக சீர்கேட்டின் பிறப்பிடம் சினிமா..







         மனிதர்கள் தேடும் பொழுதுபோக்கிலேயே மிகவும் மோசமானதும், கீழ்த்தரமானதும் தான் இந்த சினிமா துறை.

பொய், பித்தலாட்டம், போதை, விபச்சாரம் என, உலகிலுள்ள அத்துனை  
அய்யோக்கியத் தனங்களையும் நேரடியாக காட்�டியும், கற்றும் தரப்படுவது இங்கேதான்.
கொலை,கொள்ளை,கற்பழிப்பு என சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சீர்கேடுகளும், இங்கிருந்து பாடம் கற்றே செய்யப்படுகின்றன.

அவர்களில், "கில்லி" படத்தை பார்த்து மிளகாய் தூள் தூவினேன், "பருத்திவீரன்"படம் கற்பழித்தேன் என்று வெளிப்படையாக வாக்குமூலம் கொடுத்த குற்றவாளிகளும் சிலர் உண்டு..
அவர்கள் காசுக்காக நடிக்கும் கூத்தாடிகள்.அதைப் பார்த்து செய்தவனுக்கு அறிவில்லையா..? என்று சிலர் கேட்கும் கேள்வியும் நியாயமானது தான்.

ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்கப் பட்ட சினிமா, இன்று பலரின் வாழ்க்கையின் முன்மாதிரியாகவே மாறிவிட்டது.வெறும் கூத்தாடிகளாக பார்க்கப் பட்டவர்கள், இன்று பலரின் வாழ்க்கையின் வழிகாட்டியாகவே மாறிவிட்டார்கள்.

கல்லூரி காதலையே மிகவும் நாகரீகமாக இலை மறை காயாக காட்டிகொண்டிருந்த தமிழ் சினிமா,இன்று விடலைப் பருவத்தின் பள்ளிக் காதலை கூட இளம் சமுதாயத்தின் உணர்ச்சிகளை உடைத்தெறியும் விதத்தில் மிகவும் வெளிப்படையாய் காட்ட ஆரம்பித்து விட்டது.அதற்��கான விளைவையும் இன்று பல வீடுகள் பார்த்துவிட்டன.சினிமா பார்த்து
சீரழிந்த சில விடலையர்களின் செய்கைகளால், எத்தனைப் பெற்றோர்கள் கண்ணீரையும் அவமானத்தையும் சந்தித்துள்ளனர்.

இன்னும் இதுபோல எத்தனையோ சீர்கேடுகளுக்கு பிறப்பிடமாக இருக்கும் நடிகர்களைதான் இன்றைய இளைஞர்கள் தலைவனாக தலைதூக்கி வைத்துளள்ளனர்.
இப்படிப்பட்ட விபச்சார ஆண்களை தான் இளம்பெண்கள் கனவு நாயகனாக நினைக்கிறார்கள்.

தனக்கு வரப்போகும் கண்வன் கூ�ட சூர்யா மாதிரி இருக்க வேண்டும், ஆர்யா மாதிரி இருக்க வேண்டும் என்று வெளிப்படையாய் சொல்லும் அளவுக்கு இன்றைக்ககு தரம்கெட்டு திரியும் பெண்கள் ஏராளம்.இதில் முஸ்லீம் பெண்களும் அடங்குவர் என்பது இன்னும் வேதனைக்குரிய விஷயம்.

சிந்தியுங்கள்..!!
அவர்களின் ஒவ்வொரு அசைவும் காசுக்காக..
அவர்களின் சிரிப்பு உண்மையல்ல..காசுக்காக..
அவர்களின் அழுகை உண்மையல்ல..காசுக்காக..
அவர்களின் நடை, உடை,பேச்சு,பழக்கம் என்று,அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் எதுவுமே உண்மையல்ல..காசுக்கான போலி வேஷங்கள்.

உடலையும்,உணர்வுகளையும், வியாபாரம் செய்யும் பிறவிகளை உங்கள் முன்மாதிரியாக ஆக்காதீர்கள்.இதனால் இழப்புகள் மட்டுமே உங்களுக்கு.

இதுபோன்ற பலரின் அறிவுறத்தலை கேட்டும் நீங்கள் உங்கள் நிலையை தொடர்ந்தால், கீழ்காணும் இறைவசனம் உங்களையே குறிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

"ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

அல்குர்ஆன் 7 : 179
   

பிஸ்மில்லாஹ்

இறை கிருபையால் ஆரம்பம்